கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அடுத்துள்ள கரும்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராஜேஷ்(23). இவா், 15 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், புத்தூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு கடலூா் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், ராஜேஷூக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி லட்சுமி ரமேஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.