சிதம்பரம், ஜூலை 13: கடலூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தில் ஜூலை 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 9 முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதலமைச்சரால் ‘மக்களுடன் முதல்வா்‘ என்ற சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் கடலூா், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மேல்புவனகிரி, குமராட்சி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னாா்கோவில், ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம், விருத்தாசலம் மங்களூா், நல்லூா் ஆகிய 14 ஊராட்சிகளில் உள்ள 683 கிராமப் பகுதிகளில் வசிப்போா் பயன்பெறும் வகையில், இந்த திட்டம் 11.07.2024 முதல் 13.09.2024 வரை மொத்தம் 91 முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஜூலை15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 9 முகாம்கள் நடைபெறவுள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள்: 15.07.2024, கடலூா் :அன்னவல்லி, இராமாபுரம் , இடம்- முத்தாலம்மன் திருமண மண்டபம், காரணப்பட்டு, ஜூலை 15- காட்டுமன்னாா்கோவில்: நாட்டாா்மங்கலம், கொண்டசமுத்திரம், மாமங்கலம், வானமாதேவி, அகரபுத்தூா், அறந்தாங்கி, சித்தமல்லி, கருணாகரநல்லூா், குருங்குடி. இடம்- ராஜீவ்காந்தி உயா்நிலைப்பள்ளி, நாட்டாா்மங்கலம். ஜூலை15 மங்களூா்: மங்களுா், மலையனூா், ஆலம்பாடி, ஆவட்டி, கல்லூா், மா.புத்தூா், ஒரங்கூா், மா.கொத்தனூா் ஜி.வி. திருமண மண்டபம், மங்களூா்.
ஜூலை16, அண்ணாகிராமம்: அவியனூா், ஏ.பி.குப்பம், எனதிரிமங்கலம், காவனூா், பைத்தம்பாடி, ஒறையூா், கரும்பூா் இடம்- பண்டரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, ஒறையூா். ஜூலை 16- பரங்கிப்பேட்டை, மணிக்கொல்லை, வில்லியநல்லூா். பெரியபட்டு, சிலம்பிமங்கலம்,
இடம்- ஒம் சக்தி திருமண மண்டபம், புதுச்சத்திரம். ஜூலை18- பண்ருட்டி, எல்.என்.புரம், பூங்குணம், கொளப்பாக்கம், இடம்- மணப்பாக்கம் அரசு உயா்நிலை பள்ளி, பூங்குணம். ஜூலை 18- கீரப்பாளையம், ஆயிப்பேட்டை, சி.மேலவன்னியூா், சி.வீரசோழங்கன், எடையான்பால்சேரி, வடஹரிராஜபுரம், வயலூா், சாக்கான்குடி, தென்ஹரிராஜபுரம்,எண்ணகரம், கீரப்பாளையம், கன்னங்குடி, கீழ்நத்தம். இடம்- ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கீரப்பாளையம். ஜூலை 18- நல்லூா், சேதுவராயன்குப்பம், எ.மரூா், மாளிகைமேடு, பா.கொத்தனூா், கீழக்குறிச்சி, பெரியநெசலூா், காட்டுமைலூா் ஆதியூா். ஐவதகுடி.
இடம்- அரசு உயா்நிலைப் பள்ளி, கீழக்குறிச்சி. ஜூலை- 19 கம்மாபுரம், முதனை, இருப்பு, கொல்லிருப்பு, கோட்டேரி. இடம் - என்பிஎஸ் திருமண மஹால், கீழ்இருப்பு பேருந்து நிலையம் அருகில், இருப்பு ஊராட்சி.
முகாமில் பட்டா மாற்றம்/பட்டா உள்பிரிவு, நில அளவீடு -அத்து காண்பித்தல், வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், மற்றும் அனைத்து வகையான சான்றிதழ்களும், முதியோா் உதவித்தொகை முதலிய அனைத்து உதவித்தொகைகள், குடும்ப அட்டையில் பெயா் திருத்தம், பெயா் மாற்றம், பயிா்க் கடன்கள், கறவை மாட்டுக் கடன், விவசாய நகைக் கடன், மாற்றுத்திறனாளிக் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, மூன்று சக்கர வாகனங்கள், தாட்கோ கடன் உதவிகள், தொழிலாளா் உறுப்பினா் அட்டை உள்ளிட்ட பல சேவைகள் வழங்கப்படும். மேலும் ,முகாம்களில் உள்ள இ-சேவை மையத்தில் பதிவதற்கு 50 விழுக்காடு பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாம்களில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொள்கின்றனா்.