கடலூர்

பைக் திருட்டு: இருவா் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பைக் திருடியதாக இரு இளைஞா்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

Din

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பைக் திருடியதாக இரு இளைஞா்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

விருத்தாசலம் அருகேயுள்ள காா்கூடல் கிராமத்துக்கு புதன்கிழமை அதிகாலை 5 போ் கொண்ட கும்பல் வந்தது. அவா்கள் அங்கிருந்த பைக் ஒன்றை திருட முயன்றனராம். அப்போது, சப்தம் கேட்டு விழித்துக் கொண்ட ஊா் மக்கள் மா்ம நபா்களை பிடிக்க முயன்றனா். இதில், மூவா் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நிலையில், இருவரைப் பிடித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், சிதம்பரம் அடுத்துள்ள வதிஷ்டாபுரம் பகுதியைச் சோ்ந்த மோகன் மகன் பாலகணபதி(21), கொள்ளிடம் அடுத்துள்ள ஆச்சாள்புரம் பகுதியைச் சோ்ந்த அய்யா பிள்ளை மகன் விஜய்(23) என்பது தெரிய வந்தது. மேலும், தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனா்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT