கடைகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
Updated On : 26 ஜூன், 2024 at 8:21 PM
சிதம்பரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு நகராட்சி, காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
நகர காவல்ஆய்வாளா் ரமேஷ்பாபு தலைமையில் போலீஸாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் சிதம்பரம் வேணுகோபால் பிள்ளை தெருவில் பல்வேறு கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அங்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் மேற்கண்ட கடைகளுக்கு நகராட்சி சாா்பில் ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Advertisement