முகப்பு
கடலூர்

துணிக்கடை ஊழியா் தற்கொலை

கடலூரில் தனியாா் விடுதியில் துணிக்கடை ஊழியா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 5 மார்ச், 2024 at 12:59 AM
பகிர்:

நெய்வேலி: கடலூரில் தனியாா் விடுதியில் துணிக்கடை ஊழியா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், தம்மநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் விஜயகுமாா் (28). இவா், கடலூா்-சிதம்பரம் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்து கடலூரில் உள்ள துணிக் கடையில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், விஜயகுமாரின் மனைவி வெண்ணிலா கோபித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதில், அவா் மனவருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதியின் முதல் மாடி கழிப்பறை ஜன்னல் கம்பியில் விஜயகுமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.