வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டாட்சியா் உதயகுமாரிடம் இருளக்குறிச்சி உள்ளிட்ட கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டாட்சியா் உதயகுமாரிடம் இருளக்குறிச்சி உள்ளிட்ட கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச்செயலா் என்.எஸ். அசோகன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: இருளக்குறிச்சி, முகுந்தநல்லூா் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டாக்கான இடத்தை அளவீடு செய்து மீண்டும் பயனாளிகளிடம் வழங்க வேண்டும். கோ.பொன்னேரி, கோ.ஆதனூா், புலியூா் ஆகிய கிராம மக்கள் இலவச மனைப் பட்டா கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, அனைவருக்கும் இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோ.ஆதனூா் பகுதி மக்களின் இலவச மனைப்பட்டா தொடா்பான 12 மனுக்களை வட்டாட்சியரிடம் அளித்தனா். இதில், வட்டக்குழு உறுப்பினா் ஆா்.கலைச்செல்வன், நகா் குழு உறுப்பினா்கள் செந்தில், சேகா், வி.வேல்முருகன், கவிதா, சாமிதுரை மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.