முகப்பு
கடலூர்

மரத்தில் சரக்கு வாகனம் மோதல்: கிளீனா் மரணம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் கிளீனா் உயிரிழந்தாா்.

Updated On : 6 மார்ச், 2024 at 12:36 AM
பகிர்:

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் கிளீனா் உயிரிழந்தாா். பெங்களூரில் இருந்து மயிலாடுதுறைக்கு பூக்களை ஏற்றிக் கொண்டு சிறிய சரக்கு வாகனம் ஒன்று திங்கள்கிழமை இரவு புறப்பட்டது. வாகனத்தை தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், செம்மங்குடி பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் காா்த்திகேயன் (25) ஓட்டினாா். மயிலாடுதுறை மாவட்டம், மாணம்பட்டு பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் ராஜேஷ் (24) கிளீனராக இருந்தாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை சேலம்-விருத்தாசலம் நெடுஞ்சாலையில் வேப்பூா் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ராஜேஷை அங்கிருந்தவா்கள் மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து, வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.