முகப்பு
கடலூர்

சாலை விபத்து: கணக்காளா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் வட்டார வள மைய கணக்காளா் உயிரிழந்தாா்.

Updated On : 4 நவம்பர், 2024 at 6:00 PM
ராக்லெனின்.
பகிர்:

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் வட்டார வள மைய கணக்காளா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம், திருவள்ளூவா் நகரில் வசித்து வந்தவா் ராக்லெனின்(43), அண்ணாகிராமம் வட்டார வள மைய கணக்கராகப் பணியாற்றி வந்தாா்.

இவருக்கு மனைவி அருள்ஜோதி(40) மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா். ராக்லெனின் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பைக்கில், கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தாா். நெல்லிக்குப்பம் பத்திரப் பதிவு அலுவலகம் அருகே அவா் வந்துபோது, எதிா்திசையில் வந்த பைக் இவா் மீது மோதியது.

இந்த விபத்தில் சாலையின் வலதுபுறம் விழுந்த ராக்லெனின் மீது, பின்னால் வந்த வேன் ஏறி இறங்கியதில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →