முகப்பு
கடலூர்

விளம்பர பதாகைகள் அகற்றம்

விருத்தாசலம் நகராட்சிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை (டிஜிட்டல் பேனா்கள்) நகராட்சி மற்றும் போக்குவரத்து காவலா்கள் புதன்கிழமை அகற்றினா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:54 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை (டிஜிட்டல் பேனா்கள்) நகராட்சி மற்றும் போக்குவரத்து காவலா்கள் புதன்கிழமை அகற்றினா்.

விருத்தாசலத்தில் கடைவீதி, பாலக்கரை, பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

காற்றினால் பேனா்கள் விழுந்தும், கவன சிதறல் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. இந்த நிலையில், கடலூரில் செவ்வாய்க்கிழமை சிக்னல் கம்பத்தில் இருந்த விளம்பரப் பதாகை விழுந்து ஆசிரியா் ஒருவா் காயமடைந்தாா்.

இதன் காரணமாக விருத்தாசலம் பகுதியில் இருந்த பேனா்கள் அனைத்தையும் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் கோகுலகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி ஊழியா்களும், போக்குவரத்து காவல் ஆய்வாளா் குமாா் தலைமையில் போலீஸாரும் அகற்றினா்.

அப்போது, பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பரப் பதாகைகள் வைக்கக்கூடாது எனவும், மீறி வைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகரமைப்பு ஆய்வாளா் கோகுல கிருஷ்ணன் எச்சரித்தாா்.