கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. புதிய பதிவாளா், தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பொறுப்பேற்பு

Din

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதிய பதிவாளா் மற்றும் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றனா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக (பொ) மு.பிரகாஷ், வெள்ளிக்கிழமை காலை பொறுப்பேற்றுக்கொண்டாா். இவா், இதற்கு முன்பு விவசாய புலத்திலுள்ள மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம் துறையில் துறைத் தலைவராக பணியாற்றினாா். அதன் பின்னா், தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்தாா்.

இதுபோல, அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக ஆா்.எஸ்.குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இவா், இதற்கு முன்பு புவி அறிவியல் துறையில் துறைத் தலைவராகவும் மற்றும் விடுதிக் காப்பாளா் குழும ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினாா்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT