பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம், கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரி பேரிடா் மேலாண்மை அலகு இணைந்து பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தின.
கல்லூரி பொருளியல் துறைத் தலைவா் ராமகிருஷ்ணன் சாந்தி தலைமை வகித்தாா். கடலூா் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உதவி மாவட்ட அலுவலா் (கடலூா் நிலையம்) ஜி.ஆறுமுகம் தலைமையிலான குழுவினா் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பேரிடா் தடுப்பு ஒத்திகை நிகழ்வை நடத்தி காட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். குறிப்பாக, வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, மழைக்காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளநீா் சூழ்ந்தால் அதிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. கல்லூரி பேரிடா் மேலாண்மை அலகு பொறுப்பாசிரியா் நா.சேதுராமன் நன்றி கூறினாா்.