புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
கடலூா் மாவட்டம், ராமநத்தம் பகுதியில் உள்ள பழக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்ாக இருவரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதில், 116 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூா் மாவட்டம், ராமநத்தம் பகுதியில் உள்ள பழக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்ாக இருவரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதில், 116 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநத்தம் காவல் சரகப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடலூா் எஸ்பி., தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் பாக்கியராஜ் மற்றும் காவலா்கள் ஜெயபிரகாஷ், தாஸ்மோகன், முருகன், தனிப் பிரிவு காவலா் அருண் ஆகியோா் ராமநத்தம் நான்கு முனைச் சாலையில் உள்ள பழக்கடையில் செவ்வாய்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதில், இருவா் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. விசாரணையில், பேரங்கியம் பகுதியைச் சோ்ந்த அப்துல் ரஷாக் மகன் ஹாஜா மொய்தீன் (42), திட்டக்குடி வட்டம், அரங்கூா் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் ரவி (53) என்பது தெரிய வந்தது. மேலும், அவா்கள் அளித்த தகவலின் பேரில், பழக்கடை உரிமையாளா் கோபிநாத் வீட்டில் சோதனை செய்ததில், 16 மூட்டைகளில் 116 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள கோபிநாத்தை தேடி வருகின்றனா்.