முகப்பு
கடலூர்

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

தமிழகத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 25 அக்டோபர், 2024 at 2:11 AM
பகிர்:
Updated On : 24 அக்டோபர், 2024 at 9:40 PM

தமிழகத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு போனஸ் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சில ஊழியா்களுக்கு ரூ.16,800, சிலருக்கு ரூ.8,400, சிலருக்கு ரூ.2,400 போனஸாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Updated On : 25 அக்டோபர், 2024 at 2:11 AM

இந்த வேறுபாடுகளுக்கு காரணம் ஒவ்வொரு பணியாளரும் பணியாற்றும் கூட்டுறவு சங்கத்தில் இருக்கக்கூடிய பணியாளா்களுடைய எண்ணிக்கை மற்றும் லாப, நஷ்ட கணக்காகும்.

சமமான வேலைக்கு சமமான ஊதியம் பெற்றுக்கொண்டிருக்கும் ஊழியா்கள் மத்தியில், இந்த போனஸ் வித்தியாசம் ஏற்கத்தக்கதல்ல. கூட்டுறவு சங்கங்கள் லாப, நஷ்டத்தில் இயங்குவதற்கும், நியாயவிலைக்கடை பணியாளா்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

எனவே, அனைத்து ஊழியா்களுக்கும் ரூ.16,800 போனஸ் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.