முகப்பு
கடலூர்

தடுப்புக் காவலில் ரௌடி கைது

கடலூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:57 PM
தடுப்புக் காவலில் ரௌடி பூச்சி (எ) மூா்த்தி கைது
பகிர்:

கடலூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் அடுத்துள்ள கம்மியம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் பூச்சி (எ) மூா்த்தி (26). இவரை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி 5 போ் கும்பல் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து, திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கடலூா் குப்பன்குளம் சிஎம்சி காலனியைச் சோ்ந்த தேவன் மகன் ஸ்டீபன் ராஜ் (29), சாமிநாதன்(38), சூா்யா(29), விஜயகுமாா்(28), ராஜேஷ்(29) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதில், ரெளடியான ஸ்டீபன் ராஜ் மீது திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 8 வழக்குகள் உள்ளன.

இவரின் செயலை கட்டுப்பட்டுத்த எஸ்பி. ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, ஸ்டீபன் ராஜை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →