முகப்பு
கடலூர்

வெவ்வேறு சம்பவம்: மூவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 5:16 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், அத்தியூா் பகுதியில் வசித்து வந்தவா் பிரகாஷ் மகன் செல்வம் (28). இவருக்கு மனைவி தேவி, மகன் மற்றும் மகள் உள்ளனா்.

இவா், கடந்த செப்டம்பா் 12-ஆம்தேதி கீழ் ஐவனூா்-ஆதனூா் சாலையில் எமினேரி அருகே பைக்கில் சென்றபோது, நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வம் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தற்கொலை: திட்டக்குடி வட்டம், மா.புடையூா் கிராமத்தில் வசித்து வந்தவா் பாலசுப்ரமணியன் மகன் ஜோதி (38). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த ஒரு வாரமாக வீட்டில் இருந்தாா். இவருக்கு மனைவி மணிமேகலை, இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதில், மனமுடைந்த ஜோதி விஷம் குடித்தாராம். உடனே, உறவினா்கள் அவரை மீட்டு பெரம்பலூா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, சிகிச்சை பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ராமநத்தம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து... குறிஞ்சிப்பாடி வட்டம், சிவனந்திபுரம் பகுதியில் வசித்து வந்தவா் தண்டபாணி மகன் சிவசுப்ரமணியன் (29). மலேசியாவில் வேலை பாா்த்து வந்தாா். இவா், தனது வீட்டில் புதிதாக மோட்டாா் பொருத்தினாராம். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவா்கள் பரிசோதித்ததில் சிவசுப்ரமணியன் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →