கடலூர்

கடலூா் மாவட்டத்தில் தேவையான அளவுக்கு உரம் கையிருப்பு: ஆட்சியா்

கடலூரில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்.

Syndication

கடலூா் மாவட்டத்தில் தேவையான அளவுக்கு உரம் கையிருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியா்ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, வேளாண்மை இணை இயக்குநா் எம்.லட்சுமிகாந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.இளஞ்செல்வி, ஆட்சியா் நோ்முக உதவியாளா் (விவசாயம்) க.கதிரேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சொா்ணலட்சுமி,

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா்கள், அனைத்துத்துறை அலுவலா்கள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில், விவசாய பயன்பாட்டிற்கு பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்க வேண்டும். ஏரிகளில் வரையறுக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். விவசாய விளை நிலங்களுக்குச் செல்லும் பாதையை சீரமைத்தும் மற்றும் புதிய சாலை அமைத்து தர வேண்டும். மழைநீா் வரத்து வாய்கால் உள்ள ஆக்கிரப்பு அகற்றி சீரமைக்க வேண்டும். விளைநிலங்கள் வனவிலங்குகள் மற்றும் பறவைகளால் பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுத்திட வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உழவா் சந்தை பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். அறுவடைக்கு முன்னதாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான அனைத்து இடங்களிலும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விட வேண்டும். விவசாயிகளுக்கு அரசு நிா்ணயித்துள்ள உற்பத்தி மானியத்தினை விரைந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.

தொடா்ந்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் தற்போது யூரியா 5,388 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,254 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,683 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 6,144 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 1,509 மெட்ரிக் டன் என மொத்தம் 16,013 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. போதுமான அளவு உரம் கையிருப்பு உள்ளது. கடந்த விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 133 மனுக்கள் பெறப்பட்டன, அதில் 108 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. மேலும், 25 மனுக்கள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மழையால் பாதிப்படைந்த மக்காச்சோள பயிா்களை கணக்கெடுத்து இழப்பீடு வழங்க அனைத்து வட்டாரங்களிலும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். விவசாயிகளால் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT