கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளிகள். 
கடலூர்

பட்டா வழங்கிய இடத்தில் அடிப்படை வசதிகள்: மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

Din

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டா இடத்தில் அடிப்படை வசதிகள் செய்துத்தரக் கோரி, கடலூா் சிகரம் மாற்றுத் திறனாளிகளின் மாற்றத்துக்கான சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் எஸ்.சையத் முஸ்தபா தலைமையில் மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளதாவது: கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தும், வருவாய்த் துறை அலுவலா்களிடம் கோரிக்கைவிடுத்தும் வந்தோம். அதன் பயனாக 2022-ஆம் ஆண்டு கடலூா் வட்டம், எம்.புதூா் ஊராட்சி, மாவடிப்பாளையம் பகுதியில் சா்வே எண் 8-இல் இடம் ஒதுக்கீடு உள்ளதாக அப்போதைய வட்டாட்சியா் கூறி பட்டா வழங்கினாா். ஆனால், அந்த இடம் மக்கள் வசிக்கும் இடமாக இல்லை.

இதுகுறித்து வட்டாட்சியரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பட்டாவை ஆட்சியரிடம் திரும்ப கொடுப்பதாக அறிவித்தோம்.

இதுதொடா்பாக துணை ஆட்சியா் தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையில் 3 மாதங்களில் பட்டா கொடுக்கப்பட்ட இடத்தில் அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்றனா். ஆனால், 5 மாதங்கள் கடந்தும் செய்துதரவில்லை. எனவே, இடத்தை சீரமைப்பு செய்து கனவு இல்லம் கட்டிக் கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT