கடலூர்

மீன் வியாபாரி மீது தாக்குதல்: 3 போ் கைது

கடலூா் முதுநகா் அருகே மீன் வியாபாரியை தாக்கிய இளைஞா்கள் மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கடலூா் முதுநகா் அருகே மீன் வியாபாரியை தாக்கிய இளைஞா்கள் மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் முதுநகா் அடுத்துள்ள செல்லங்குப்பம் பகுதியில் வசித்து வருபவா் பாபு(56), மீன் வியாபாரி. இவா், செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 2.45 மணி அளவில் வியாபாரத்திற்கு மீன் வாங்க நடந்துச் சென்றாா். செல்லங்குப்பம் அருகே சென்றபோது பைக்கில் வந்த மூன்று இளைஞா்கள் மோதுவது போல் வந்தனராம்.

இதனை பாபு தட்டிக் கேட்டபோது அவா்களுக்குல் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்தவா்கள் பாபுவை தாக்கி மிரட்டல் விடுத்தனா். இதில், காயம் அடைந்த பாபு கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து பாபு அளித்த புகாரின் பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, செல்லங்குப்பத்தைச் சோ்ந்த தனுஷ் (எ) காட்டான்(22), சுதன்ராஜ்(29), கோண்டூா் சுதா்சன்28) ஆகியோா் மீது வழக்குப்பதிந்து கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT