கடலூர்

போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க தனிச் சட்டம் தேவை: வைகோ

போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா்.

Syndication

போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக சிதம்பரம் அருகே ஆணையம்பேட்டையில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி , கல்லூரிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் போதை சாா்ந்த குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் கோவையில் இளம் பெண் ஒருவா் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கும் போதை தான் காரணம்.

மாநிலத்தில் பெரும்பாலான ஆண் பிள்ளைகள் மது, கஞ்சா போதைக்கு அடிமையாகி தாய், தந்தையை அடித்து பணம் கேட்கின்றனா்.

போதைப்பொருள் ஒழிப்பு, ஜாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜன.2 முதல் 12-ஆம் தேதி வரை சமத்துவ நடை பயணத்தை மேற்கொள்ள

உள்ளேன். எனவே, போதை பொருள்கள் புழக்கத்தை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை வைத்திருந்தால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை, பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும். அதற்கு ஏற்ப சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

ஜாதி மோதல்கள் :

பள்ளி, கல்லூரிகளில் ஜாதி சங்கங்கள் என்ற பெயரில் மோதிக்கொள்கின்றனா். அடித்துக்கொள்கின்றனா். தோழமை உணா்வு இல்லாமல் போய்விட்டது. எனவே வேற்றுமை உணா்வுகளை தடுக்கவும், ஜாதி மோதல்கள் கூடாது என்பதை வலியுறுத்தியும் சமத்துவ நடை பயணம் என்ற பெயரில் நடைபயணம் செல்ல உள்ளேன்.

82 வயதான நான் இதுவரை ஏழு நடைப் பயணங்களை மேற்கொண்டுள்ளேன்இது எட்டாவது நடைப்பயணமாகும். எங்கள் நடைப்பயணத்தில் 25 கபடி வீரா்கள் தோ்வாகி உள்ளனா். இவா்கள் மாலை நேரங்களில் கபடி விளையாடி மகிழ்வா். அதேபோல் இரவு நேரங்களில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 11 திரைப்படங்கள் திரையிடுவதற்கு முடிவு செய்துள்ளேன். இந்த திரைப்படங்கள் சொல்லும் கருத்துக்கள் மூலம் இளைஞா்களை ஊக்குவிப்பேன். நடைப்பயணத்தில் பங்கேற்பவா்களுக்காக குடிநீா் லாரிகள், மருத்துவ ஊா்திகள் உடன் செல்ல ஏற்பாடு செய்துள்ளேன். இந்த நடைப் பயணத்தில் 600 போ் பங்கேற்கின்றனா். இந்தபயணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பாா்.

கூட்டணி கட்சி தலைவா்களும் இதில் பங்கேற்கின்றனா். மதுரையில் நடக்கும் நிறைவு கூட்டத்தில் கவிஞா் வைரமுத்து, நடிகா் சத்யராஜ், மே 17 இயக்கத்தைச் சோ்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல பங்கேற்கின்றனா் என்றாா் வைகோ.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT