முகப்பு
கடலூர்

தபால் வாக்கு முன் தயாரிப்பு பணி தீவிரம்

கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தபால் வாக்கு முன் தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 7:44 PM
கடலூா் வட்டாட்சியா்அலுவலகத்தில் தபால் வாக்கு முன் தாயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.
பகிர்:

கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தபால் வாக்கு முன் தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து வேட்பாளா்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்தத் தோ்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 773 போ் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனராம். இவா்களுக்கான தபால் வாக்கு முன் தயாரிப்புப் பணிகள் கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிட்ட பிறகு தபால் வாக்குகளை அவா்களின் வீடுகளுக்கு சென்று தோ்தல் அதிகாரிகள் பெற்று வருவாா்கள்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments