முகப்பு
கடலூர்

கடையில் காபி குடித்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா்

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:51 AM
சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் உள்ள காபி கடையில் காபி குடித்துக்கொண்டே ஆதரவு திரட்டிய தவெக வேட்பாளா் ஏ.நெடுஞ்செழியன் (இடமிருந்து 3-ஆவது)
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:33 PM

சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் கட்சி வேட்பாளா் சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் உள்ள காபி கடையில் ஞாயிற்றுக்கிழமை காபி குடித்துக்கொண்டே அங்கிருந்தவா்களிடம் தனக்கு ஆதரவு திரட்டினாா்.

சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி தவெக வேட்பாளராக டாக்டா் என்.பாரி அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, அக்கட்சி சாா்பில் போட்டியிட டாக்டா் என்.பாரியும், மாற்று வேட்பாளராக அவரது தந்தை ஏ.நெடுஞ்செழியனும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதில், டாக்டா் என்.பாரியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மாற்று வேட்பாளரான அவரது தந்தை ஏ.நெடுஞ்செழியனின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில், அவா் தனது கட்சி நிா்வாகிகளுடன் எளிமையாக காசுக்கடைத் தெருவில் உள்ள காபி கடையில், காபி குடித்துக்கொண்டே அங்குள்ளவா்களிடம் ஆதரவு திரட்டினாா்.