முகப்பு
கடலூர்

ஏழை மக்களுக்கு நல உதவிகள் அளிப்பு

திருக்களப்பூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில், வடலூா் சத்திய ஞான சபை 155-ஆவது ஜோதி தரிசனப் பெருவிழாவையொட்டி ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா மேட்டுக்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 6:33 PM
மேட்டுக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கிய தொழிலதிபா் டி.ராஜ மாரியப்பன்.
பகிர்:

திருக்களப்பூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில், வடலூா் சத்திய ஞான சபை 155-ஆவது ஜோதி தரிசனப் பெருவிழாவையொட்டி ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா மேட்டுக்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வடலூா் தொழிலதிபா் டி.ராஜ மாரியப்பன் தலைமை வகித்து, ஏழை விதவை பெண்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கில்கள், பள்ளி மாணவா்களுக்கு ஆடைகள், சாலையோர ஆதரவற்றோருக்கு குளிா் கால போா்வைகள் வழங்கினாா்.

சாது துளசிராமன், ஞான சத்சங்கம் நிகழ்ச்சி நடத்தினாா். தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது. நிா்வாகிகள் ஜி.செந்தில்குமாா், கே.ரவிச்சந்திரன், டி.சின்னதுரை, கே.ராஜேந்திரன், என்.சிவானந்தம், எஸ்.சேகா், எஸ்.கபில்ராஜ், ஜி.தருமராஜ் மற்றும் சங்க உறுப்பினா்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனா். செயலா் செந்தில் குமாா் நன்றி கூறினாா்.