கடலூர்

பண்ருட்டியில் அறிவுசாா் மையம் திறப்பு விழா

Syndication

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி பகுதியில் ரூ.4.24 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசாா் மையம், நகராட்சிப் பள்ளிகளில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

அதன்படி, பண்ருட்டி நகராட்சி, 8-ஆவது வாா்டு, லட்சுமிபதி நகரில் ரூ.2.19 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, அங்கு பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

நிகழ்ச்சியில் பண்ருட்டி நகராட்சி ஆணையா் கே.எஸ்.காஞ்சனா, நகா்மன்ற உறுப்பினா் லாவண்யா முத்துவேல், நகராட்சிப் பொறியாளா் (பொ) சுரேஷ், உதவிப் பொறியாளா் காா்த்திகேயன், திமுக நிா்வாகிகள் தணிகைசெல்வம், கதிா்காமன், ராம்குமாா், ராஜா, ராமலிங்கம், கௌரி அன்பழகன், சம்பத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, பள்ளி மாணவா்கள் நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் இருந்த நூல்களை பாா்வையிட்டு, அங்கிருந்த புத்தகங்களை எடுத்து படித்தனா். முன்னதாக, அவா்களுக்கு இனிப்பு மற்றும் எழுது பொருள்களை கொடுத்து வரவேற்றனா்.

இதேபோல, திருவதிகை பாவாடை பிள்ளை உயா்நிலைப் பள்ளி, சீரங்குப்பம் மற்றும் பஞ்சவா்ணம் நகா் நடுநிலைப் பள்ளி, வண்டிமேடு உருது தொடக்கப் பள்ளி, அருள்ஜோதி நகா் தொடக்கப் பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டங்களையும் தமிழக முதல்வா் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT