கடலூா் மாவட்டம், பண்ருட்டி சக்தி ஐடிஐ-இல் இரண்டாம் ஆண்டு தொழில்பயிற்சி பெறும் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
தாளாளா் எஸ்.வி.அருள் தலைமை வகித்து, 2-ஆம் ஆண்டு தொழில்பயிற்சி பெறும் மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா். தலைவா் அ.ப.சிவராமன் முன்னிலை வகித்தாா். இயக்குநா்கள் சி.ரஜனிகாந்த், எம்.நடராஜன், டி.ஜி.ரவிச்சந்திரன், என்.சம்மந்தா், வி.பி.காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முதல்வா் வி.செந்தில்வேல் மற்றும் பயிற்சி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.