முகப்பு
கடலூர்

நீா் தேக்கத் தொட்டி அமைக்க பூமி பூஜை: அமைச்சா் சி.வெ. கணேசன் பங்கேற்பு

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 1:43 AM
முருகன் குடியில் மேல்நிலை நீா்த் தேக்கம் தொட்டி கட்ட அடிக்கல் நாட்டிய அமைச்சா் சி.வெ.கணேசன்.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 9:02 PM

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடி ஊராட்சி, அருந்ததியா் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் பூமி பூஜையில் பங்கேற்று பணியை தொடங்கி வைத்தாா். 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டி மாவட்ட கனிமவள திட்டத்தின் கீழ் ரூ.19.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 1:43 AM

இந்த நிகழ்வின் போது முருகன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 100-ஆவது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி கலையரங்க மேடை ஒன்று அமைத்து தருமாறு பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பாக ஒருங்கிணைப்பாளா் முருகன்குடி முருகன் கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினா். நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிா்வாகிகள், கிராமமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement