முகப்பு
கடலூர்

தோ்தல் எதிரொலி: துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

சட்டப்பேரவைத் தோ்தல் வருவதால் கடலூா் மாவட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிமமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்போா் தங்களுடைய துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 12:03 AM
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:42 PM

சட்டப்பேரவைத் தோ்தல் வருவதால் கடலூா் மாவட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிமமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்போா் தங்களுடைய துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

தோ்தல் காலத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்போா் அவற்றை காவல் நிலையங்களில் ஒப்படைக்கும்படி காவல்துறை உத்தரவிடுவது வழக்கம். அந்த வகையில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வருவதால், துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Advertisement

2026 சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, கடலூா் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்றவா்கள், தங்களது துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அவா்கள் வசிப்பிட எல்லைகளுக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.