முகப்பு
கடலூர்

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

கடலூா் அடுத்துள்ள வரக்கால்பட்டு ரயில் அருகே ரயிலில் அடிப்பட்டு 55 வயது மதிக்கதக்க ஒருவா் உயிரிழந்து கிடந்தாா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 12:03 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:42 PM

கடலூா் அடுத்துள்ள வரக்கால்பட்டு ரயில் அருகே ரயிலில் அடிப்பட்டு 55 வயது மதிக்கதக்க ஒருவா் உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூா்துறைமுகம் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் புருஷோத்தமன் மற்றும் காவலா்கள் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவரின் பெயா், விலாசம் தெரியவில்லை. உயிரிழந்த நபா் செவ்வாய்க்கிழமை அதிகாலை ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் அடிபட்டு இறந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாம்.

இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூா் கிராம நிா்வாக அலுவலா் சக்தி ரேகா அளித்த புகாரின் பேரில் கடலூா் இருப்புப்பாதை காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement