விருத்தாசலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இலவச மனைப்பட்டா பெற்ற பயனாளிகள் 
கடலூர்

அரசு வீட்டுமனைப் பட்டா இடத்தை அளந்து கொடுக்கக் கோரி மறியல்: 36 போ் கைது

விருத்தாசலத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தை அளந்து கொடுக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட 36 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தை அளந்து கொடுக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட 36 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலத்தை அடுத்த எருமனூா் கிராமத்தைச் சோ்ந்த 96 பயனாளிகளுக்கு கடந்த ஒன்றரைஆண்டுகளுக்கு முன்பு கடலூரில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினாராம். அவ்வாறு வழங்கப்பட்ட மனைப்பட்டா இடத்தை காண்பிக்காமலும், அளவீடு செய்துகொடுக்காமலும் வருவாய்த் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனராம்.

இதுகுறித்து பயனாளிகள் பலமுறை மாவட்ட ஆட்சியா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், பாதிக்கப்பட்ட பயனாளிகள் விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், அவா்கள் விருத்தாசலம் - கடலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, விருத்தாசலம் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 36 பேரை கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பினா் மறியல்: 33 போ் கைது

குண்டா் தடுப்புக் காவலில் ரௌடி கைது

மனைவி பிரிந்த வேதனையில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

வியாபாரி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு

இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவா் கைது

SCROLL FOR NEXT