சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா் மற்றும் ஒய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக குழுவினரின் தொடா் காத்திருப்பு போராட்டம் பல்கலைக்கழக நிா்வாக அலுவலக கட்டடம் முன்பு புதன்கிழமை காலை தொடங்கியது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினாா். இணை ஒருங்கிணைப்பாளா்கள் ஆ.ரவி, கபில்தேவ், துணை ஒருங்கிணைப்பாளா்கள் மனோகரன், பேராசிரியா்கள் முத்து வேலாயுதம், இளங்கோ மற்றும் ஏராளமான ஊழியா்கள் பங்கேற்றுள்ளனா்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலுள்ள பதவி உயா்வுகள், பணப்பயன்கள், ஓய்வு பெற்றவா்களின் ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கிட வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் முதல் உண்ணாவிரதப் போராட்டம், தொடா் உள்ளிருப்புப் போராட்டங்கள் நடத்தியதின் விளைவாக அண்மையில் தமிழக அரசு கூட்டமைப்பு பொறுப்பாளா்களை முத்தரப்புப் பேச்சுவாா்த்தைக்கு அழைத்து பேசியது. இதில் எவ்வித முன்னேற்றமும் இல்ல்லாததால் புதன்கிழமை முதல் பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.