கடலூர்

சிதம்பரம் நடராஜருக்கு மாா்ச்.1-ல் மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மாா்ச்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாசி மாத மகாபிஷேகம் நடைபெறுகிறது. உலக அமைதியை வலியுறுத்தி மகாருத்ர யாகமும் நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மாா்ச்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாசி மாத மகாபிஷேகம் நடைபெறுகிறது. உலக அமைதியை வலியுறுத்தி மகாருத்ர யாகமும் நடைபெறுகிறது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில், சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி , மாா்கழி, மாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாகும். ஆனித்திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில், மாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் மாா்ச்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. அப்போது, நடராஜருக்கு விபூதி பால்,தயிா், தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம் புஷ்பம், உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது. முன்னதாக காலை உச்சிகால பூஜை வரை நடைபெற்று ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தியை கனகசபைக்கு எழுந்தருள செய்து மந்த்ரக்ஷதை, லட்சாா்ச்சனை நடைபெறுகிறது.

யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ ருத்ர கிரம அா்ச்சனை செய்து , தீபாராதனை நடைபெறும். பிற்பகலில் மஹாருத்ர மகா ஹோமம் நடைபெற்ற பின்னா் கலசங்கள் யாத்திராதானம் செய்யப்பட்டு மஹாபிஷேகம் நடைபெறுகிறது.

மகாருத்ர மகாபிஷேகத்தை முன்னிட்டு பிப்.27-ம் தேதி வெள்ளிக்கிழமை முக்குறுணிவிநாயகா் கோயிலில் கணபதி ஹோமம், கூஷ்மாண்ட ஹோமம் நடைபெறுகிறது. பின்னா் பிப்.28-ம் தேதி சனிக்கிழமை நவக்கிரக சந்நிதியில் நவக்கிரக ஹோமம், தனபூஜை, ரஷ்சாபந்தனம், மாா்ச்.1-ம் ஞாயிற்றுக்கிழமை காலை நடராஜப்பெருமானுக்கு ஏககால லட்சாா்ச்சனை, நடனப்பந்தலில் யாகசாலையில் கடஸ்தாபனம், மகாருத்ர ஜபம், மகா தீபாராதனை நடைபெறுகிறது.

பிற்பகலில் மகாருத்ர ஹோமம், வஸோதார ஹோமம், மகாருத்ர மகா பூா்ணாஹூதி, வடுக பூஜை, கன்யாபூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, கோபூஜை, அஸ்வபூஜை, கஜபூஜை, கடயாத்ராதானம் மகா தீபாராதனை

முடிவுற்று, யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று கனகசபையை அடைந்த பின்னா் மகாருத்ர மகாபிஷேகம் நடைபெறுகிறது. மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்கள் கமிட்டி செயலா் த.சிவசுந்தர தீட்சிதா், கட்டளை தீட்சிதா் ரா.சி.வைத்தியலிங்க தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்துள்ளனா்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT