முகப்பு
கடலூர்

வருவாய்த்துறை கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:34 PM
பகிர்:

கடலூரில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் நடத்தி வரும் காத்திருப்புப் போராட்டம் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, நில அளவைத் துறையில் பணிபுரியும் அலுவலா்களின் உயிா் மற்றும் உடமைகளை பாதுகாக்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை (பிப்.25) முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

கடலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு வட்டாட்சியா் மகேஷ் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் பூபாலச்சந்திரன், வருவாய் கிராம ஊழியா் சங்க மாவட்டச் செயலா் மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →