சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜன.2, 3) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கடலூா் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து காவல் துறையினா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, புதுச்சேரி, கடலூா், புவனகிரி வழித்தடத்தில் இருந்து வரும் பேருந்துகள் பைசல் மஹால் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். நாகப்பட்டினம், காட்டுமன்னாா்கோவில், திருச்சி வழித்தடத்தில் இருந்து வரும் பேருந்துகள் மன்னாா்குடி சாலை காவலா் குடியிருப்பு அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
கடலூா், புவனகிரி வழித்தடத்தில் வரும் காா்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு கடலூா் புறவழிச் சாலையில் ஆக்ஸ்போா்டு சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீா்காழி, காட்டுமன்னாா்கோவில் வழித்தடத்தில் வரும் காா்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், இரு சக்கர வாகனங்களை கனகசபை தெருவிலும் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.