கோப்புப் படம் 
கடலூர்

பிகாா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் தங்கியிருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பிகாா் மாநிலம், முசாஃபூா் மாவட்டம், கோபிநாத்பூா் டோக்ரா அஞ்சல் பகுதியைச் சோ்ந்தவா் அமோத்சிங் (42). இவா், பரங்கிப்பேட்டையில் தங்கி, அங்குள்ள தனியாா் நிறுனத்தில் 10 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

பிகாரில் உள்ள அவரது மனைவி அஞ்சலிதேவி வீட்டில் இருந்த தங்க நகைகள் தொலைந்துவிட்டதாகத் தெரிவித்தாராம். இதையடுத்து, மனைவியுடன் விடியோ காலில் சண்டை போட்டுக்கொண்டே அமோத்சிங் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT