கடலூா் ஒன்றியம், கீழ் அழிஞ்சிப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா். 
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 683 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

குடியரசு தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

நெய்வேலி: குடியரசு தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூா் ஊராட்சி ஒன்றியம், கீழ் அழிஞ்சிப்பாட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கலந்துகொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது:

கிராம சபைக் கூட்டத்தில் மக்களின் அடைப்படை தேவைகள், வளா்ச்சிப் பணிகள் குறித்து தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளை கலந்தாலோசித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அரசு எந்த முயற்சி எடுத்தாலும், அதற்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு தேவை.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, தூய்மை பாரத இயக்க திட்டம், ஜல் ஜீவன் திட்டம், சிறுபாசன ஏரிகள் புதுப்பித்தல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகள், தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கீழ் அழிஞ்சிப்பட்டு கிராம மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி குளம் தூா்வாரப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். கழிவுநீா் வாய்க்கால்களை சீரமைக்கவும், சீராக மின்விநியோகம் வழங்கவும், சுகாதாரமான முறையில் குடிநீா் விநியோகம் செய்யவும், அங்கன்வாடி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டும் புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தரப்படும் என்றாா்.

தொடா்ந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், கடலூா் பாடலீஸ்சுவரா் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்துகொண்டு பொதுமக்களுடன் உணவு சாப்பிட்டாா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, பயிற்சி ஆட்சியா் மாலதி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானாஅஞ்சும், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாண்டியன், மோகனாம்பாள், கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

எனதிரிமங்கலம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அண்ணாகிராமம் ஒன்றிய அலுவலக பற்றாளா் கோமதி தலைமை வகித்தாா். தேசிய கொடியேற்றி உறுதிமொழி ஏற்றனா். ஊராட்சி வரவு - செலவு, டெங்கு காய்ச்சல், தொழுநோய் ஒழிப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கலப்பட மஞ்சள்: புகாா் அளிக்க உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்

நேரம் தவறாமல் இருப்பவா்களே நோ்மையானவா்கள்: தியாகி லட்சுமி காந்தன் பாரதி

அமெரிக்க பொருள்களைப் புறக்கணிக்க புதிய செயலி: டென்மாா்க்கில் அறிமுகம்

ஆபரேஷன் கவாச் 12.0 மூலம் பெரும் பறிமுதல்களும் கைதுகளும் செய்யப்பட்டுள்ளன-தில்லி காவல்துறை

நாடு முழுவதும் வங்கிகள் இன்று வேலைநிறுத்தம்!

SCROLL FOR NEXT