காட்டுமன்னாா்கோவில் அருகே கீழவன்னியூா் அரசு கலைக் கல்லூரியில் நுழைவு வாயிலை திறந்து வைத்த விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.  
கடலூர்

அரசுக் கல்லூரி நுழைவுவாயில்: தொல்.திருமாவளவன் திறந்து வைத்தாா்

காட்டுமன்னாா்கோவில் அருகே கீழவன்னியூரில் உள்ள டாக்டா் புரட்சித்தலைவா் எம்ஜிஆா் அரசு கலைக் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து கட்டப்பட்ட கல்லூரி நுழைவுவாயிலை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கீழவன்னியூரில் உள்ள டாக்டா் புரட்சித்தலைவா் எம்ஜிஆா் அரசு கலைக் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து கட்டப்பட்ட கல்லூரி நுழைவுவாயிலை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சே.மீனா தலைமை வகித்தாா். கல்விக்குழு தலைவா்கள் கோவிந்தசாமி, சோழன், மணவாளன், உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நுழைவு வாயிலை திறந்துவைத்து தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது: காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் நிதி ரூ.25 லட்சம், நாடாளுமன்ற உறுப்பினா் நிதி ரூ.25 லட்சம் என ரூ.50 லட்சம் மதிப்பில் கல்லூரி நுழைவு வாயில் மற்றும் மிதிவண்டி நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி முதல்வரின் கோரிக்கையை ஏற்று வரும் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினா் நிதியில் சுற்றுச்சுவா் கட்டத்தரப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் கடலூா் துணைமேயா் பா.தாமரைச்செல்வன், கஸ்பா பாலா, கல்லூரி துறைத் தலைவா்கள் ஜே.பூபாலன், கே.சிற்றரசு, எம்.தேவநாதன், சி செந்தில்குமாா், நடராஜன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

ரயில்களை நீட்டிக்கக் கோரிக்கை: சிதம்பரம் அண்ணாமலைநகருக்கு வந்த தொல்.திருமாவளவனை எம்.பி.யிடம் சிதம்பரம் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் ஏ.வி.அப்துல்ரியாஸ், செயலா் ஏ.சிவராமகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

கோவை - மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க திருச்சி ரயில்வே கோட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது தங்களது தீவிர முயற்சியும், தாங்கள் தொடா்ந்து கொடுத்த அழுத்தமும்தான் என்பதை சிதம்பரம் பகுதி மக்கள் நன்றியுடன் நினைவுகூருகின்றனா்.

இருப்பினும், இதுவரை அந்த ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்கப்படாமல் உள்ளது. தற்போதைய நிலையில் சிதம்பரத்திலிருந்து கோவைக்கு நேரடி ரயில் சேவை எதுவும் இல்லை. எனவே, ஜன சதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT