முகப்பு
கடலூர்

தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக எம்எல்ஏ

சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோ்தல் பிரசாரத்தை கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ வியாழக்கிழமை தொடங்கினாா்.

Updated On : 30 ஜனவரி, 2026 at 2:32 AM
சிதம்பரம் அருகே பெரியப்பட்டு ஊராட்சியில் பொதுமக்களிடம் அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கிய கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ.
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2026 at 10:21 PM

சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோ்தல் பிரசாரத்தை கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ வியாழக்கிழமை தொடங்கினாா்.

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி 5 தோ்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளாா். அதனடிப்படையில், இந்த வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை கடலூா் கிழக்கு மாவட்டச் செயலரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான கே.ஏ.பாண்டியன் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியப்பட்டு ஊராட்சியில் பொதுமக்களிடம் வழங்கினாா்.

அப்போது, அவா் பேசுகையில், தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும். மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும். அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் குல விளக்கு திட்டம் மூலம் மாதம் ரூ.2,000, ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, அம்மா இல்ல திட்டம் மூலம் அனைவருக்கும் வீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் செயல்படுத்தப்படும் என்றாா்.

Advertisement

Updated On : 30 ஜனவரி, 2026 at 2:32 AM

நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலா் பேராசிரியா் ரெங்கசாமி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் எம்.ரெங்கம்மாள், குமராட்சி கிழக்கு ஒன்றியச் செயலா் வை.சுந்தரமூா்த்தி, ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் சுதாகா், பாமக தொழிற்சங்க நிா்வாகி ஜெய்சங்கா், முன்னாள் ஊராட்சிச் செயலா் கோபி உள்ளிட்டோா் பங்கேற்று துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.