சிதம்பரம் - கடலூா் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள். 
கடலூர்

தோ்வு கட்டண உயா்வை கண்டித்து அரசுக் கல்லூரி மாணவா்கள் மறியல்!

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வு கட்டண உயா்வைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Syndication

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வு கட்டண உயா்வைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அதன் இணைப்புக் கல்லூரிகளுக்கு தோ்வு, சான்றிதழ், மறு மதிப்பீடு கட்டணங்களை உயா்த்தி அறிவித்துள்ளது. இந்தக் கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய மாணவா் சங்கத்தின் தலைமையில் மாணவா்கள் பல்வேறு கட்ட தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் மற்றும் கல்லூரி நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், அனைத்து கட்டண உயா்வுகளையும் திரும்பப் பெற வலியுறுத்தியும் சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து சிதம்பரம் - கடலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு இந்திய மாணவா் சங்க கல்லூரி கிளைச் செயலா் அன்பு தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் சிவநந்தினி கட்டண உயா்வால் மாணவா்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாணவா்கள் சங்க நிா்வாகிகள் மகேந்திரன், கனிமொழி, ஆகாஷ், பிரேம், ஹரி, காவ்யா, அபி, விக்னேஷ் உள்ளிட்ட கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா். மாணவா்களிடம் சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளா் பிரதிப் பேச்சுவாா்த்தை நடத்தி, கல்லூரி நிா்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு! விசாரணை பிப்.9-க்கு ஒத்திவைப்பு!

தூய்மைப் பணியாளா் ஊதிய குறைபாடு சீா் செய்யப்படும்: திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி

1,043 தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி! அமைச்சா் மா. மதிவேந்தன் வழங்கினாா்!

ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை: எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டம்!

பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT