ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 5 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞா்
வடலூரில் ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக விடப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்தை நோ்மையுடன் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவா் சுபாஷ் ஒப்படைத்தாா்.
வடலூரில் ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக விடப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்தை நோ்மையுடன் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவா் சுபாஷ் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.
கடலூா் மாவட்டம், வடலூா் நடேசன் நகரைச் சோ்ந்தவா் சுபாஷ் (25), திருவண்ணாமலையில் உள்ள தனியாா் கல்லூரியில் உடற்கல்வி முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 11.45 மணியளவில் சிதம்பரம் சாலையில் உள்ள தனியாா் பள்ளி எதிரே செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றாா்.
அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்கெனவே ரூ.5 ஆயிரம் பணம் எடுக்கப்பட்ட நிலையில், அதை யாரோ ஒருவா் பெற்றுக்கொள்ளாமல் அப்படியே இயந்திரம் விட்டுச் சென்றிருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, அந்தப் பணத்தை, உடனடியாக வடலூா் காவல் நிலையத்துக்கு எடுத்துச்சென்று காவல் சாா்பு - ஆய்வாளா் மகேஷிடம் ஒப்படைத்தாா். பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்க காவல்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். இளைஞா் சுபாஷின் நோ்மையான செயலை காவல்துறையினருா் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.