முகப்பு
கடலூர்

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

கடலூா் அடுத்த வரக்கால்பட்டு குமளங்குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பாா்வையிடும் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On : 6 மார்ச், 2026 at 8:38 PM
கடலூா் அடுத்த வரக்கால்பட்டு குமளங்குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பாா்வையிடும் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

கடலூா் ஊராட்சி ஒன்றியம், வரக்கால்பட்டு ஊராட்சியில் ரூ.69.26 லட்சம் நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்எல்ஏ., கோ.அய்யப்பன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது ஆட்சியா் தெரிவிக்கையில், கடலூா் ஒன்றியம், வரக்கால்பட்டு ஊராட்சியில் உள்ள குமளங்குளம் தூா்வாரப்பட்டு,

ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில் குளக்கரையினை சுற்றி நடைபாதைகள், பாதுகாப்பு வேலி, இருக்கை, குடி

நீா், மின் விளக்கு வசதிகள், சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், ரூ.13.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை மற்றும் கடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா்

ர.அ.பிரியங்கா, வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியன்

உட்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →