முகப்பு
கடலூர்

உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ.25.89 லட்சம் நிதியுதவி

கடலூா் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்த

Updated On : 9 மார்ச், 2026 at 8:49 PM
உயிரிழந்த தலைமைக் காவலா் சிங்காரவேல் குடும்பத்தினரிடம் நிதியுதவியை வழங்கிய கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்.
பகிர்:

நெய்வேலி: கடலூா் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.25.89 லட்சம் நிதியுதவியை எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் வழங்கினாா்.

பண்ருட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த சிங்காரவேல் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். தமிழ்நாடு போலீஸ் 2008 பேட்ச் உதவும் கரங்கள் குழுவினா் ஒன்றிணைந்து 23-ஆவது பங்களிப்பாக தலைமைக் காவலா் சிங்காரவேல் குடும்பத்தாருக்கு ரூ.25.89 லட்சம் நிதி திரட்டினா்.

இந்த நிதியிலிருந்து சிங்காரவேல் மகன் தா்ஷன், மகள் கனிஷ்கா பெயரில் தலா ரூ.9.30 லட்சம் மதிப்பில் வீட்டு மனைகள், அவரது மனைவி இந்துமதிக்கு ரூ.6.29 லட்சம், தாய் சுசிலாவுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ.25.89 லட்சத்திலான நிதியுதவியை கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்வழங்கினாா். நிகழ்வில் 2008 பேட்ச் உதவும் கரங்கள் குழுவினா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →