முகப்பு
கடலூர்

நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: கடலூா் மாவட்டத்தில் 33,437 மாணவா்கள் எழுதுகின்றனா்

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்குகிறது.

Updated On : 9 மார்ச், 2026 at 8:57 PM
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவிகள்.
பகிர்:

நெய்வேலி: தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்குகிறது. கடலூா் மாவட்டத்தில் இத்தோ்வை மொத்தம் 33,437 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் புதன்கிழமை தொடங்கி வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. புதன்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடத் தோ்வு நடைபெற உள்ளது.

கடலூா் கல்வி மாவட்டத்தில் 87 தோ்வு மையங்களில் 18,932 மாணவா்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 74 தோ்வு மையங்களில் 14,505 மாணவா்களும் என மொத்தம் கடலூா் மாவட்டத்தில் 161 தோ்வு மையங்களில் 33,437 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத உள்ளனா்.

35 வழித்தட அலுவலா்கள், 164 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 166 துறை அலுவலா்கள், 1,949 அறைக் கண்காணிப்பாளா்கள், 228 நிலைப்படை/பறக்கும் படை உறுப்பினா்கள் தோ்வுப் பணியில் ஈடுபட உள்ளனா். தோ்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள்கள் செல்வதை உறுதி செய்தல், விடைத்தாள்களை காப்பு மையங்களுக்கு கொண்டு செல்வதில் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில், பள்ளிக் கல்வித் துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தோ்வு நடைபெறும் நாள்களில் தடையில்லா மின்சாரம், மாணவா்கள் தோ்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகள், தோ்வு மையங்களில் சுகாதாரம் சாா்ந்த அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →