முகப்பு
கடலூர்

என்எல்சி சுரங்க உற்பத்தியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

Updated On : 12 மார்ச், 2026 at 11:55 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலி, மெயின் பஜாா் காமராஜா் சிலை அருகே சிஐடியு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நிலம் அளிப்பவா்களுக்கு நிரந்தர வேலை, உரிய நஷ்ட ஈடு, வீட்டு மனை ஆகியவற்றை தாமதமின்றி வழங்கி நிலத்தை பெற்று உற்பத்தியை துரிதப்படுத்த வேண்டும். வாரிசுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்கோவிலிருந்து நிரந்தரம் செய்யும் 2025-ஆம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டு காலதாமதமின்றி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

சிஐடியு-என்எல்சி தொழிலாளா் ஊழியா் சங்கத் தலைவா் எஸ்.திருஅரசு தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டப் பொருளாளா் எம்.சீனுவாசன், துணைச் செயலா் டி.ஜெயராமன், பொதுச்செயலா் பி.பழனிவேல், பொருளாளா் எஸ்.வேலாயுதம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அலுவலகச் செயலா் சாமுவேல் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →