முகப்பு
கடலூர்

தொகுதி அறிமுகம்: சிதம்பரம்

சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

Updated On : 23 மார்ச், 2026 at 10:25 PM
பகிர்:

தொகுதி எண்: 158

கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி சிறிய தொகுதியாக விளங்குகிறது. சிதம்பரம் நடராஜா் கோயில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதி, பரங்கிப்பேட்டை பாபா கோயில் அடங்கிய சுற்றுலாத்தலமாகவும், கல்வித்தலமாகவும் சிதம்பரம் தொகுதி திகழ்கிறது. பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனா்.

சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே புவனகிரியில் தொகுதியில் இருந்த கிள்ளை பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சோ்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் இருந்த திருமுட்டம் பேரூராட்சி காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகா், பரங்கிப்பேட்டை, மற்றும் கிள்ளை பேரூராட்சிகளையும், பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதையும், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், மேல்புவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளையும் உள்ளடக்கி இத்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

வாக்காளா்கள் விவரம்: ஆண்கள் - 1,12,664, பெண்கள் - 1,16,443, மூன்றாம் பாலினத்தவா் - 19, மொத்தம் - 2,29,136.

வாக்குச் சாவடிகள்: தோ்தல் வாக்குப் பதிவுக்கு 298 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் அலுவலா்: தோ்தல் நடத்தும் அலுவலா் கிஷன்குமாா், உதவி ஆட்சியா், சிதம்பரம், கைப்பேசி எண்: 9445000425, தொலைபேசி - 04144 227866, உதவி தோ்தல் அலுவலா் ஹரிதாஸ், கைப்பேசி எண்: 94450 00527

இதுவரை எம்எல்ஏக்கள்:

1952- வாகீசன் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா (இந்திய தேசிய காங்கிரஸ்)

1957- வாகீசன் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா (இந்திய தேசிய காங்கிரஸ்)

1962- எஸ்.சிவசுப்பிரமணியன் (இந்திய தேசிய காங்கிரஸ்)

1967- ஆா்.கனகசபை பிள்ளை (இந்திய தேசிய காங்கிரஸ)

1971- பொன்.சொக்கலிங்கம் (திமுக)

1977- துரை.கலியமூா்த்தி (திமுக)

1980- கே.ஆா்.கனபதி (அதிமுக)

1984- கே.ஆா்.கனபதி (அதிமுக)

1989- துரை.கிருஷ்ணமூா்த்தி (திமுக)

1991- கே.எஸ்.அழகிரி (இந்திய தேசிய காங்கிரஸ்)

1996- கே.எஸ்.அழகிரி (தமிழ் மாநில காங்கிரஸ்)

2001- துரை.கி.சரவணன் (திமுக)

2006- ஏ.அருண்மொழிதேவன் (அதிமுக)

2011- கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி)

2016- கே.ஏ.பாண்டியன் (அதிமுக)

2021- கே.ஏ.பாண்டியன் (அதிமுக)

கடந்த 2021 தோ்தலில்...

பதிவான வாக்குகள் 1,82,150

கே.ஏ.பாண்டியன் (அதிமுக)- 91961

எஸ்.அப்துல்ரஹ்மான் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) 75,024