ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
சிதம்பரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சிதம்பரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சிதம்பரம் ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் தியாகராஜன், தலைமைக் காவலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் சனிக்கிழமை பணியில் இருந்தனா்.
விழுப்புரத்திலிருந்து திருவாரூா் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடை எண் 1-இல் வந்தபோது, அவா்கள் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, நடைமேடை எண் 1 பகுதியில் 150 கிலோ எடையுள்ள 6 மூட்டை ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது.
Advertisement
இந்த அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, கடலூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.