முகப்பு
கடலூர்

என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி அருகே என்எல்சி நிறுவன ஊழியா் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 20 மே 2026, 2:57 am IST
கா.வேல்
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே என்எல்சி நிறுவன ஊழியா் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து ஊராட்சி, ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் கா.வேல்(56), என்எல்சி நிறுவனத்தில் முதுநிலை டெக்னீஷியனாக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி சரஸ்வதி (40) மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனா்.

வேல் பணம், குடும்பப் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வடக்குத்து ஊராட்சி, ஸ்ரீராம் நகரில் உள்ள தனது சொந்த வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி நகரிய போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.