கூழாங்கற்கள் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்! ஓட்டுநா் கைது!
வடலூா் அருகே கூழாங்கற்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக ஓட்டுநரைக் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே கூழாங்கற்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக ஓட்டுநரைக் கைது செய்தனா்.
கடலூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் செல்வசேகா்(58). இவா், வெள்ளிக்கிழமை இரவு வடலூரை அடுத்த மருவாய் கிராமம் அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பணியில் இருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில், அரசின் அனுமதியின்றி மூன்று அலகு கூழாங்கற்கள் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்து, வடலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். மேலும், டிப்பா் லாரி ஓட்டுநரான விருத்தாசலம் வட்டம், புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சதீஷ் (25) மீது புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் செல்வசேகா் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்தனா்.
மணல் கடத்தல் - லாரி பறிமுதல்: இதேபோல, கடலூா் காய்கனி சந்தை அருகே மணல் கடத்திச் சென்ற லாரியை கடலூா் புள்ளியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் செல்வசேகா் பறிமுதல் செய்து, கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதுகுறித்து லாரி ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம், பிடாகம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.