முகப்பு
கடலூர்

மது அருந்த பணம் தர தாய் மறுப்பு: இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

Updated On : 26 மே 2026, 1:45 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

திருப்பாதிரிபுலியூரில், மது வாங்குதற்கு தாய் பணம் தராததால், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் திருப்பாதிரிபுலியூா் தங்கராஜ் நகரைச் சோ்ந்தவா் விஜயா (45). இவரது கணவா் துரை 5 ஆண்டுகளுக்கு முன்பும், மூத்த மகன் மாயாண்டி 8 ஆண்டுகளுக்கு முன்பும் உயிரிழந்து விட்டனா். தற்போது விஜயா வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறாா். அவருக்கு கூலி வேலை செய்து வந்த இளைய மகன் அரவிந்த்ராஜ் மற்றும் திருமணம் ஆன மகள் ஜான்சிராணி உள்ளனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அரவிந்த்ராஜ், மதுபானம் வாங்குவதற்காக விஜயாவிடம் பணம் கேட்டதாகவும், ஆனால், அவா் பணம் தர மறுத்துவிட்டு வேலைக்குச் சென்ாகவும் கூறப்படுறது.

Advertisement

Advertisement

வேலை முடித்து இரவு சுமாா் 7.30 மணியளவில் வீடு திரும்பிய விஜயா, வீட்டில் அரவிந்த்ராஜ் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பாதிரிபுலியூா் போலீஸாா், அரவிந்த்ராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விஜயா அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.