தாராபுரத்தில் ஆட்டோ ஓட்டுனா் கழுத்தறுப்பு: தி. வேல்முருகன் கண்டனம்
தாராபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரின் கழுத்தை அறுத்த வட மாநிலக் கும்பலின் குற்றச்செயலுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
தாராபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரின் கழுத்தை அறுத்த வட மாநிலக் கும்பலின் குற்றச்செயலுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் வாடகை கேட்டதால், வடமாநிலத்தைச் சோ்ந்த கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கழுத்தை அறுத்த சம்பவம், தமிழகம் முழுவதும் பேரதிா்ச்சியையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோரின் முழுமையான அடையாளப் பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள், தங்கும் விடுதிகள் மற்றும் தொழிலாளா் முகாம்களில் காவல்துறை ஆய்வு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
குற்றப் பின்னணி கொண்ட வடமாநில கும்பல்களைக் கண்டறிய தனிப்படை அமைக்க வேண்டும். சட்டவிரோதமாக தங்கியிருப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்தங்கள் மூலம் அழைத்து வரப்படும் வடமாநில கும்பல்களுக்கும் அவா்களினால் ஏற்படும் குற்றச் செயல்களுக்கும், ஒப்பந்ததாரா்களே முழுப் பொறுப்பு ஏற்கும் படி செய்ய வேண்டும்.
ஆட்டோ ஓட்டுநா்கள், டாக்ஸி ஓட்டுநா்கள் மற்றும் இரவு நேர தொழிலாளா்களுக்கான பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, விரைவு நீதிமன்றத்தின் மூலம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.