கள்ளக்குறிச்சி

சமூக இடைவெளி: கடைகளுக்குகள்ளக்குறிச்சி ஆட்சியா் எச்சரிக்கை

DIN

கள்ளக்குறிச்சியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதன் உரிமையாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா எச்சரித்தாா்.

கள்ளக்குறிச்சி நகரில் அவா் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது திறந்திருந்த மளிகை, பலசரக்கு கடைகளுக்குச் சென்று சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிா என கண்காணித்தாா். அப்போது, கடைக்காரா்களிடம், கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுக்கும் நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வணிகா்கள் தங்கள் கடைக்கு அத்தியாவசியப் பொருள்களை வாங்க வரும் வாடிக்கையாளா்களிடம் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும். தவறினால், கடைகளுக்கு சீல் வைக்க நேரிடும் என எச்சரித்தாா்.

அதே போல, இறைச்சி கடைகளுக்கும் சென்று அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT