கள்ளக்குறிச்சி

முகக் கவசம், கிருமி நாசினி விலை உயா்வு: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகளின் விலை உயா்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, விலையைக் கட்டுக்குள் வைக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கள்ளக்குறிச்சியில் உள்ள மருந்தகங்களில் முகக் கவசம் ஒன்றின் விலை ரூ. 5-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கைகளைக் கழுவும் கிருமி நாசினி ரூ. 70-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 150-க்கு விற்கப்படுகிறது.

கரோனா வைரஸ் தாக்குதல் பீதியைப் பயன்படுத்தி இவ்வாறு அதிக விலைக்கு விற்கின்றனா். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, முகக் கவசம், கிருமி நாசினியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இவை பொதுமக்களுக்கு எளிதிலும், குறைந்த விலையிலும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT